சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஜலகண்டாபுரத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர்.

அகற்றப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் நடும் முயற்சியில் பாஜக-வினர் ஈடுபட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசாருக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக தொண்டர் ஒருவர் போலீஸ்காரர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்து பர்ஸை அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/slmdhanapal/status/1478775628711161858

முன்னாள் காவல்துறை அதிகாரி தலைமையில் இயங்கும் தமிழக பா.ஜ.க. வில் இதுபோன்ற பிக்பாக்கெட் பேர்வழிகள் இடம்பெற்றிருப்பது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளதோடு அதற்காக தமிழக காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.