சென்னை

மிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது.

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது.   பேரவையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி வருகிறார்.   ஆளுநர் தனது உரையில் தமிழக அரசின் பல திட்டங்களைப் பாராட்டி உள்ளார்.

ஆளுநர் ரவி தனது உரையில்

“தமிழக அரசு இயற்கை வளங்களைக் காப்பதில் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது.

தமிழக அரசுக்கு வெள்ள பாதிப்புகளைச் சரி செய்யத் தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

விரைவில் 24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புக்கள் தொடங்கப்படும்.   அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக்கல்வியைப் பாதியில் நிறுத்திய 73,00 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயர்கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் மேலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்

தமிழகத்தில் உள்ள 145 பெரியார் சமத்துவபுரங்கள் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

அரசு பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% மகளிர் இலவசமாகப் பயணம் செய்துள்ளனர்.

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புக்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதில் முனைப்புடன் உள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.