80 களில் வெளியான பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, மௌன ராகம், விதி, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட வெள்ளிவிழா படங்களில் கதாநாயகனாக நடித்தவர் மோகன்.

1999 ம் ஆண்டு “அன்புள்ள காதலுக்கு” என்ற படத்தை இயக்கி தோல்வியடைந்தார் மோகன்.

அதன் பின் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் கடைசியாக 2008 ம் ஆண்டு வெளியான சுட்ட பழம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

துணை நடிகராக வாய்ப்புகள் வந்த போதும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பதில் உறுதியாக இருந்தார் மோகன்.

தற்போது 12 ஆண்டுகள் கழித்து விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘ஹரா’ என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது, அதன் பின் இந்த திரைப்படம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.