பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் ராம்நகரா பகுதியில் இன்று பல்வேறு திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன.

மாநில அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் மற்றும் கெம்பேகவுடா சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சி.என். அஸ்வத்நாராயண் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த தொகுதி காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் அமைச்சரின் சர்ச்சை பேச்சு குறித்து மேடையிலேயே எழுந்து அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் அமைச்சர் மற்றும் எம்.பி. க்கு இடையே நடைபெற்ற இந்த மோதலை அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர்.