வாஷிங்டன்

உலக அளவில் நேற்று ஒருநாளில் 8,23,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பாதிப்பு கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது.   அது உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.  அதையொட்டி உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 8,23,506 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

தினசரி பாதிப்பில் அமெரிக்கா 1,85,122 பேருடன் முதல் இடத்தில் உள்ளது.  இரண்டாவதாகப் பிரிட்டன் 1,37,683 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.  அடுத்து இத்தாலியில் 61,046 பேரும் ஃபிரான்ஸில் 58,432 பேரும் கனடாவில் 35,127 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை3,06,24,560 பேர் ஆகி உள்ளது.  இதில் அமெரிக்கா 1,37,51,707 பேருடன் முதல் இடத்தில் உள்ளது.  அடுத்ததாகப் பிரிட்டனில் 26,76,277 பேரும் பிரான்சில் 19,79,639  பேரும் சிகிச்சையில் உள்ளனர்.