கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் நாளுக்குநாள் வேகமாக அதிகரித்து வருகிறது.
இன்று ஒரே நாளில் அங்கு 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொல்கத்தாவில் மட்டும் இன்று 2,398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களின் மே.வ தொற்று எண்ணிக்கை:
• 4,512 (01 ஜன.2022)
• 3,451 (31 டிச.2021)
• 2,128 (30 டிச.2021)
• 1,089 (29 டிச.2021)
• 752 (28 டிச.2021)