வாஷிங்டன்:
இந்தியாவின் பேச்சு உரிமைக்கு ஆதரவாக கருத்து கூறிய டென்னிஸ் வீராங்கணை மார்டினா நவரத்திலோவாவுக்கு தலை குணிவை ஏற்படுத்திய அமெரிக்க வாழ் இந்தியர்கள்,
பிரபல டென்னிஸ் வீராங்கணை மார்டினா நவரத்திலோவா குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிக்காவை சேர்ந்த இவர் 18 ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ¨டன் இணைந்து இரு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர். இவ்வாறு டென்னிஸ் விளையாட்டில் கொடி கட்டி பறந்த மார்டினாவுக்கு தற்போது இந்தியர்களால் தலை குணிவு ஏற்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையை எழுதியிருப்பதும் ஒரு இந்தியர் தான்.
59 வயதாகும் மார்டினா சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேச்சு உரிமைக்கு எதிராக நடந்த செயல்களுக்கும், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போலீசாரின் அத்துமீறலுக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இவரது கருத்துக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் எதிராக கடும் பதிலடி கொடுத்தனர். இது மார்டினாவுக்கு மன உலைச்சளை ஏற்படுத்தியதோடு தலை குணிவையும் ஏற்படுத்திவிட்டதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் பேச்சு உரிமைக்காக தான் மார்டினா குரல் கொடுத்தார்.
ஆனால், அவருக்கு இந்தியர்கள் இப்படி மோசமான விளைவுகளை கொடுத்தது துரதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.