சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திடுக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த இரு நாட்களாக பெய்தழை கனமழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னை மீண்டும் தீவுபோல காட்சி அளித்தது. இதுகடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. மழைகுறித்து வானிலை ஆய்வு மையமும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு வானிலை ஆய்வு மையத்தின் இயந்திரங்கள் பழுதாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், பெருமழை, புயல் போன்ற சமயங்களில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை தமிழ்நாடு அரசு சார்ந்திருக்கிறது. பெருமழை குறித்து எச்சரிக்க சென்னை வானிலை ஆய்வு மையத்தின் திறன் குறைபாடாக உள்ளது. அதனால், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை உடனடியாக மேம்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.