செஞ்சுரியன்

பிரபல தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் குயிண்டன் டி காக டெஸ்ட் போட்டிகளில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.  நேற்று முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி தென் ஆப்ரிக்கா அணியை 113 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி நடைபெற்ற நடைபெற்ற செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை தென்ஆப்ரிக்கா அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை.  ஆகவே இந்த தோல்வி  தென் ஆப்ரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.  தென் ஆப்ரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்போட்டி முடிந்தவுடன் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்  அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   சுமார் 29 வயதாகும் குயின்டன் டி காக் தென் ஆப்ரிக்கா அணியின் தூணாக விளங்கி வருகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் அறிமுகமாகிய இவர் இந்திய மைதானங்களில் பல அதிரடி வெற்றிகளை தென் ஆப்பிரிக்கா அணிக்குப் பெற்று தந்துள்ளார். குயிண்டன் டெஸ்ட் போட்டிகளில் 3,300 ரன்களும் ஒரு நாள் போட்டிகளில்  5,355 ரன்களும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 1,827 ரன்களும் குவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இது குறித்து, “குயின்டன் டி காக் இன் மனைவி சாஷாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. எனவே குயின்டன் டி காக் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என விரும்புகிறார்.  ஆகவே  அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.”  எனத் தெரிவித்துள்ளது,

குயிண்டன் ஓய்வு ரசிகர்களின் அதிர்ச்சியை அதிகப்படுத்தி உள்ளது.