கொல்கத்தா: பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என மத்தியஅரசின் அறிவுறுத்தலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
‘நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா, அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. கொரோனா அதிகரிக்கும் இடங்களில் மட்டுமே கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என தெரிவித்து உள்ளார்.
மேலும், ஒமிக்ரான் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன், அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிப்பது பொருளாதாரத்தை பாதிக்கும், ஏற்கனவே கடந்த ஆண்டுகள் பொதுமுடக்கத்தால் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால், மீண்டும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அதனால், ரோனா அதிகரிக்கும் இடங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்
கொல்கத்தாவில் இதுவரை பதிவாகியுள்ள ஒமைக்ரான் தொற்று அனைத்தும் பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஒமைக்ரான் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அதேபோன்று தற்போது அதிகரித்து வரும் கொரோனாவை கணக்கில் கொண்டு பொருளாதாரத்திற்கு பாதிப்பு வராத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.