சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில்  இன்று முதல் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதுபோல ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு அறிவுறித்தல்களை வழங்கி கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதத்தில்,  வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகளை தொடர்ந்து  கண்காணிக்கவேண்டும் என்றும்,  சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை  சுட்டிக்காட்டி, அதை தடுக்க தேவையான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தொற்று பரவலை  கண்காணிக்காவிட்டால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

ஆகவே, மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன்,இ  ஆர்டி- பிசிஆர் சோதனைகளை அதிகரிக்கவும் கூறியுள்ளது.

இதேபோல், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கும் கொரோனா  தொற்று பரவலுக்கு ஏற்ப அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.