சென்னை

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தது.  ஆனால் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது.    இது மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.   சென்னை அசோக் நகரில் ஒரே தெருவில் 6 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன்ர்.

நேற்று இதையொட்டி அமைச்சர் சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.   நேற்று ஒரே நாளில் சென்னையில் 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது 1689 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இது அதிகரிக்கும் எனக் கூறப்படுவதால் மருத்துவமனையில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சென்னை தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 300 படுக்கைகள், சோழிங்கநல்லூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 100 படுக்கைகள் மற்றும் மாதவரம் பகுதியில் 100 படுக்கைகள் என 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.