தராபாத்

தெலுங்கானா மாநிலம் கொரோனா தடுப்பூசி 100% முதல் டோஸ் போட்ட பெரிய மாநிலங்களில் முதல் இடம் பிடித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாகத் தகுதி உள்ள அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு 100% ஐ அடையப்  பல மாநிலங்கள் போட்டியிட்டு வருகின்றன;  இதுவரை 100% முதல் டோஸ் போடப்பாட்டுச் சாதனை புரிந்த மாநிலங்கள் அனைத்தும் சிறிய மாநிலங்கள் ஆகும்.

அவை அந்தமான் தீவுகள், சண்டிகர், தாதர் நாகர்  ஹவேலி, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆகும்.  இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் 100% முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த சாதனையை அதிகாரிகளுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.  பெரிய மாநிலங்களில் 100% கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுள்ள மாநிலம் தெலுங்கானா ஆகும்.   தெலுங்கானாவில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி 66% போடப்பட்டுள்ளது.