சென்னை: சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள 45வது புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்க (பபாசி) நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
தலைமைச்செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்க (பபாசி) நிர்வாகிகள் சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய த பபாசி தலைவர் வயிரவன், “45ஆவது சென்னை புத்தகத்திருவிழா நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் வரும் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் புத்தகக் காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தோம். அதன்படி முதலமைச்சர்முக ஸ்டாலின் ஜனவரி 6 ஆம் தேதி கலந்துகொள்கிறார்.
அன்றைய நிகழ்வில், 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருதினை முதலமைச்சர் வழங்கி கவுரவிப்பார் என தெரிவித்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகண்காட்சி, இந்த ஆண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி வளாகத்தில் ஜனவரி 6ந்தேதி தொடங்குகிறது. 45வது சென்னை புத்தக கண்காட்சியான இந்த புத்தக திருவிழாவல் 800 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. 6ந்தேதி தொடங்கும் புத்தக திருவிழா 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தக திருவிழாவை காண பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுழைவு கட்டணம் இலவசம். மற்றவர்களுக்கு ரூ.10 நுழைவுக் கட்டணம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக்கண்காட்சியானது தினசரி மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் , விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.