கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. அதற்கான டெண்டரை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்து வருகிறது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான ஓசூரில், பல பிரபல தொழிற்சாலைகள் உள்ளதுடன், ஒலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனமும் அமைந்துள்ளது. ஓலா நிறுவனத்தின் இ பைக் தொழிற்சாலை காரணமாக தேசிய அளவில் ஓசூர் கவனம் பெற்றுள்ளது. இன்னும் பல நிறுவனங்கள் ஓசூர் நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
இதையடுத்து ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்களை ஆலோசகர்கள் தேர்வு செய்து வழங்கலாம் என கட்டுமான நிறுவனமான டிட்கோ தெரிவித்துள்ளது. இதையடுத்து, தற்போது அங்கு உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விண்ணப்பம் விடப்பட்டுள்ளது.