காஞ்சிபுரம்: பருவமழைகாரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நீர் திறப்பு 51 நாட்களுக்கு பிறகு தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நிரம்பியது. தொடர்ந்து பெய்த பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் கடந்த மாதம் (நவம்பர்) 2 வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது பருவமழை ஓய்ந்துள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. 51 நாட்களுக்கு பிறகு இன்று உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.