மார்கழி மாதம் முடிவதற்குள் பூஜை அறையில் இந்த 1 பொருளை வைத்து ஒரு நாளாவது பூஜை செய்வது வீட்டிற்குக் கோடி நன்மைகளைக் கொடுக்கும்
மார்கழி மாதம் ஒரே நாள் வீட்டில் பூஜை செய்தாலே கோடி நன்மையை நம்மால் பெற முடியும் என்றால் அப்போது தினம் தினம் இந்த பூஜையை வீட்டில் செய்தால் நமக்கு வரக்கூடிய அபரிமிதமான பலனை நம்மால் வார்த்தையால் நிச்சயம் சொல்ல முடியாது மார்கழி மாதத்தில் நம்முடைய வீட்டில் நம் வீட்டுப் பூஜை அறையில் கட்டாயம் வைத்து வழிபட வேண்டிய ஒரு பொருள் என்ன என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான தகவலைப் பற்றியும், இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்
பின் சொல்லக்கூடிய விஷயங்களை உங்களால் முடிந்தால் தொடர்ந்து செய்யலாம் முடியாதவர்கள் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு முறை செய்தால் கூட போதும் நிச்சயமாக அதற்குண்டான பலனை அந்த பகவான் உங்கள் கையில் கொடுத்து விடுவான் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது
முதலில் பூஜையறையில் முக்கியமாக வைத்து வழிபட வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன என்று தெரியுமா? புனிதமான துளசி. பெருமாளுக்கு உகந்த மகாலட்சுமிக்கு உகந்த இந்த துளசி இலையால் உங்கள் பூஜை அறையை அலங்காரம் செய்து பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் துளசி இலைகளைச் சமர்ப்பணம் செய்து ஒரு சிறிய பஞ்ச பாத்திரத்திலோ அல்லது பித்தளை சொம்பிலோ தண்ணீரை ஊற்றி அதில் பச்சை கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு துளசி இலைகளைப் போட்டு வில்வ இலைகளைப் போட்டு அதைச் சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி உங்களுடைய பிரார்த்தனையை மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்தில் மனதார செய்யுங்கள்
இந்த வழிபாட்டை முடிந்தவர்கள் தினசரி மேற்கொள்ளலாம் முடியாதவர்கள் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம் அதுவும் முடியாதவர்கள் மார்கழி மாதம் முடிவதற்குள் உங்கள் கைகளால் பெருமாளுக்கு ஒரு நாளாவது துளசி மாலையை வாங்கி போடுங்கள் மகா லட்சுமி தேவிக்குத் துளசி மாலையைச் சமர்ப்பணம் செய்யுங்கள் இது நமக்குக் கோடி புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது என்று சொல்கிறது சாஸ்திரம் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலனடையலாம்.