சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் புதிய தரவு அலகு மையத்தை (‘Data Cell’) அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தேசிய நல வாழ்வு மையத்தில் மருத்துவத்துறை துணை இயக்குனர்கள் மற்றும் மருத்துவத்துறை உயர் அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டத்திலும், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஒமிக்ரான் பரவல் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய அரசு குழுவினருடன் ஒமிக்ரான் நிலை, தடுப்பூசி மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்த ஆலோசனை கூட்டத்திலும் அமைச்சர் கலந்துகொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ‘தரவு அலகு’ (Data Cell) தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் சிறப்பு ‘டேட்டா செல்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய மருத்தும் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த செயலியை இன்று அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
இந்த புதிய தரவு மையத்தின் மூலம் தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ துறையுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் அமையவுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மே மாதத்துக்கு பிறகு 77 இடங்களில் சித்த மருத்துவ கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டன . முதல் மற்றும் 2வது கொரோனா அலையின்போது இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து, டிஎம்எஸ் வளாகத்தில், ஒமிக்ரான பரவல் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியஅரசின் மருத்துவ குழுவினருடன் ஒமிக்ரான் நிலை, தடுப்பூசி மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்த ஆலோசனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இசென்னை தேசிய நல வாழ்வு மையத்தில் மருத்துவத்துறை துணை இயக்குனர்கள் மற்றும் மருத்துவத்துறை உயர் அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது