டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணிவரையிலான கடந்த 24மணி கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மேலும், 6,531 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டு உள்ளதுழடன் 7,141 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 75,841 சிகிச்சை பெற்று வருவதாகவும், குணமடைவோர் விகிதம் 98.40% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஒமிக்ரான பாதிப்பு 578 ஆக அதிகரித்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் இதுவரை 19 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 578 வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், 151 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
அதிக பட்சமாக தலைநகர் டெல்லியில் 142 பேருக்கும், மகாராஷ்டிராவில் 141 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று பதிவாகி உள்ளது. தமிழ் நாட்டில் 34 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 7 வது இடத்தில் உள்ளது.