டில்லி

மிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் டில்லியில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.   இந்த பாதிப்பு இந்தியாவிலும் காணப்படுவதால் மாநில அரசுகளைத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது.

இதுவரை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது.  டில்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாக உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால், “இன்று அதாவது டிசம்பர் 27 முதல் டில்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.  எனவே இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.  இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.