ஷீரடி:
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பாக்யஸ்ரீ பனாயத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மகாராஷ்டிராவின் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும். அதன்படி, டிசம்பர் 25 ஆம் தேதி முதல் இரவு 9-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை மாநில அரசு இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளதால், சாய்பாபா கோவில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதிகாலை மற்றும் இரவில் நடைபெறும் வழக்கமான ஆரத்திகளின் போது பக்தர்களுக்கு அனுமதிகிடையாது. சிற்றுண்டிச்சாலை மற்றும் பிரசாதாலயா, லடூ விற்பனை கவுண்டர் போன்றவை ஊரடங்கு நேரத்தில் மூடப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஸ்ரீமதி பாக்யஸ்ரீ பனாயத் வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் அக்டோபர் 7 ஆம் தேதி கோயில் மீண்டும் திறக்கப்பட்டது, ஆனால் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் வருவதால் தற்போது இரவு நேரங்களில் பக்தர்களுக்காக மீண்டும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.