சென்னை: 
மிழகத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது என்பதும் 400க்கும் மேற்பட்டோர் தற்போது ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இன்னும் பலருக்குப் பரிசோதனை முடிவு வர வேண்டியது இருப்பதால் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வரும் 31-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததை அடுத்து அதன் பின்னர் பள்ளிகள் திறப்பதைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.