மும்பை

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை எனப் பரிசோதனை முடிவின் மூலம் தெரிய வந்துள்ளது.

பாலிவுட் பிரபல நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள்.  இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இரவு விருந்து கொண்டாட்டங்களுக்குச் செலவது வழக்கமாகும்.   இருவரும் சமீபத்தில் ஒரு இரவு நேர விருந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இருவருக்கும் கொரோனா இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி ஆனது.  இதையொட்டி இருவரும அவரவர் வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டனர்.  மும்பை மாநகராட்சி கரீனா கபூரின் வீட்டுக்குச் சீல் வைத்தது.   இதே  விருந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிய வந்தது.  கரீனாவுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்னும் சந்தேகத்தில் அவருக்கு மரபணு வரிசை பரிசோதனை செய்யப்பட்டது.  அந்த பரிசோதனை முடிவின் மூலம் கரீனாவுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை எனபதூ உறுதி ஆகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.