சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 44ஆயிரம் கோயில்கள் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த கோவிலின் வருமானத் தைக் கொண்டு அரசு பல்வேறு மக்கள் நலப்பணிகளுக்கு உதவி வருகிறது. மேலும், கோவிலுக்கு சொந்தமானநிலங்களில் இருந்தும் கோடிக் கணக்கில் வருமானம் அரசுக்கு வருகிறது. இந்த நிலையில், ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து உள்ளனர். பலர் போலி பட்டாக்களைக்கொண்டு சொந்தமாகி உள்ளனர். இதை கண்டுபிடித்து ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு வருகிகிறது.
இதனையடுத்து, கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் இந்து அறநிலையத்துறை ஆணையர் அரசாணை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து சார்நிலை அலுவலர் களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,
தமிழகம் முழுவதும் உள்ள அரசுக்குச் சொந்தமான கோயில்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோவில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்,
குற்றம் புரிந்தவர்கள் மீது யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
தனிநபர்கள் அளிக்கும் புகாரின் அடைப்படையில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை வழங்கப்பட வேண்டும்
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.