சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் இதுவரை 34 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது ஆய்வு முடிவுகள் வர உள்ளன. இதனால் ஒமிக்ரான பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒமிக்ரான் பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பெருக்கும் மற்றும் சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இரவு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோனை கூட்டத்தில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள். தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.