புதாபி

பிரபல தமிழ் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது.  இந்த விசா 10 வருடம் செல்லத் தக்கதாகும்.   இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமக்களுக்கு இணையாகக் கருதப்படுவார்கள். ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்படப் பலர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

சமீபத்தில் பிரபல நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பாடகி சித்ரா, நடிகை த்ரிஷா உள்பட சிலருக்கு இந்த கோல்டன் விசாவை, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கவுரவித்து இருந்தது. இவ்வகையில் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனுக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த விசாவை பெறும் முதல் தமிழ் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் பார்த்திபன்,

’Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர், நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள். VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது’

எனப் பதிந்துள்ளார்.