சென்னை:
கொரோனா நோயாளிகளின் விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் அடிப்படை விவரங்களை gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சென்னை மாநகராட்சிக்குத் தெரிவிக் வேண்டும். இதைச் செய்ய த்வ்ரில்னா தெரிவிக்கத் தவறினால், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும் அந்த அறிக்கையில், வரும் மெகா தடுப்பூசி முகாமை கண்காணிக்க மாநகராட்சி மண்டலங்களுக்கு தலா ஒரு மேற்பார்வை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், சென்னையில் கடந்த 15 நாட்களில் 2.16 லட்சம் பேருக்கு RTPCR மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்குச் சராசரியாக 20,000 பேர் பரிசோதனை செய்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel