லண்டன்:
ஒமைக்ரான் பாதிப்பு 70%-க்கும் குறைவாக இருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ஒமைக்ரான் பாதிப்பைத் தடுக்க ஒரு பூஸ்டர் டோஸ் செலுத்திய பின்னர், 10 வாரங்களுக்குப் பிறகு பாதிப்பு குறையத் தொடங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா, டென்மார்க், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய பகுப்பாய்வு நவம்பர் தொடக்கத்திலிருந்து பிரிட்டனில் ஒமைக்ரான் மற்றும் டெல்ட்டா தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டது, இதில் 132 பேர் மாறுபாட்டுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான 28 நாட்களுக்குள், 14 பேர் இறந்துள்ளனர்.
ஒமைக்ரான் வயதானவர்களைத் தாக்கினால் என்ன நடக்கும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மருத்துவர் ஜென்னி ஹாரிஸ் தெரிவிக்கையில், “ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன” என்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அந்த ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ரவி குப்தா தெரிவிக்கையில், கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்க மற்றும் எதிர்கால மாறுபாடுகளிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி இன்றியமையாததாக உள்ளது என்றும், பூஸ்டர் டோஸ்களின் விளைவு குறைந்து வருவதற்கான அறிகுறிகளும் உள்ளன என்றும் தெரிவித்தார்.
சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவிக்கையில், ஆரம்ப தரவு நம்பிக்கை யளிக்கிறது என்றும், தொடர்ந்து தரவுகளை அரசாங்கம் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் எதையும் அறிமுகப் படுத்தப் போவதில்லை என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]