புதுக்கோட்டை: ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்துள்ளதை கண்டித்தும், அவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டம் இன்று 3வதுநாளாக தொடர்கிறது.
தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர் களை சிறைபிடிப்பதும், அவர்களை படகுகளை சேதப்படுத்துவதுடன், வலைகளையும் அறுத்துதெறிந்து, பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின் றன. இந்த நிகழ்வு பல ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், கடந்த 19, 20 தேதிகளில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளைச்சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் சிறை பிடித்துள்ளனர். மொத்தம் 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பில் அரசு பேருந்து நிலையம் முன்பு 19ந்தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
19ந்தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், 8 விசைப்படகுக ளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று 2வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று (22ஆம் தேதி) ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, இன்று மாலைராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி மாலை 4.30 மணியளவில் தங்கச்சிமடத்திலிருந்து சென்னை செல்லக்கூடிய அதிவிரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மீனவர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் 700 நாட்டுப் படகுகள், 3000 விசைப் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.