சென்னை

மிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,41,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,00,342 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,64,16,60 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து ஒருவர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஒருவர் வந்துள்ளனர்.   இதுவரை 27,41,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,691 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 691 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,97,244 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,078 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,60,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 8,640 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 134 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,50,618 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,332 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 95 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,52,520 பேர் பாதிக்கப்பட்டு 2,499 பேர் உயிர் இழந்து 2,48,925 பேர் குணம் அடைந்து தற்போது 1,096 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,873 பேர் பாதிக்கப்பட்டு 2,545 பேர் உயிர் இழந்து 1,71,818 பேர் குணம் அடைந்து தற்போது 510 பேர் சிகிச்சையில் உள்ளனர்.