சென்னை:
முதல்வரின் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் அரசு, தனியார் மருத்துவமனைகள் மூலமாகக் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் 1,027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.