சென்னை: பொங்கலையொட்டி, மதுரை பகுதியில் நடைபெற்று உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ல்லிக்கட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெறுவது வழக்கம். அதுபோல, 2020ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
முனனதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை மேலமடை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்துக்கு ஜல்விக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினதாக தமிழக முதல்வரை அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில், மேலும், சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசை பாராட்டியும், ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என உத்தரவித்த முலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் மற்றும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.