சென்னை

மிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,38,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,01,616 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,62,15,017 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் பிரிட்டனில் இருந்து இருவர் வந்துள்ளனர்.   இதுவரை 27,39,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,667 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 682 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,95,856 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,60,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 8,640 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 129 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,50,353 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,340 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 98 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,52,328 பேர் பாதிக்கப்பட்டு 2,495 பேர் உயிர் இழந்து 2,48,709 பேர் குணம் அடைந்து தற்போது 1,124 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,785 பேர் பாதிக்கப்பட்டு 2,545 பேர் உயிர் இழந்து 1,71,703 பேர் குணம் அடைந்து தற்போது 537 பேர் சிகிச்சையில் உள்ளனர்.