வேலூர்:
வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீக்கா ராமன் என்பவரை கைது செய்த போலீசார் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள நகைக்கடையில் கடந்த 15ஆம் தேதி அரங்கேறிய கொள்ளை சம்பவம், சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்த போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் தான் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து நகைகளை மீட்கும் பணியில் போலீசார் தீவிரம் ஈடுபட்டு வருகின்றனர்.