சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாகச் செப்டம்பர் மாதத்திலிருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில், 15-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் சென்னையின் மக்கள் தொகையில் 88.59% பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் 66% பேர் இரண்டாவது டோஸுக்கு தடுப்பூசி போட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 14-வது தடுப்பூசி முகாமை விட 15வது மெகா தடுப்பூசி முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel