சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
2022ஆம் ஆண்டு தைப் பொங்கலை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடி மகிழ, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு முழுக்கரும்பு உள்பட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் 17ந்தேதி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி, முழுக் கரும்பு, அரிசி, சா்க்கரை ஆகிய வற்றுடன் துணிப்பையையும் சோ்த்து 21 பொருள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக, ரூ.1,080 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. பொ
இந்த நிலையில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு ஜனவரி 3ந்தேதி முதல் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளத. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் இ.ஆ.ப., 17/12/2021 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் வரும் ஜனவரி 3- ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திட்டத்தை ஒருங்கிணைந்த திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2.15 கோடி அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு (ஜன.14) முன்னதாக, அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலமாக, பொருள்கள் அனைத்தையும் விநியோகம் செய்து முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.