பீகார் தலைநகர் பாட்னா அருகில் உள்ள சமஸ்திபூரில் சார் பதிவாளராக பணிபுரிபவர் மணிரஞ்சன்.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து இவரது வீட்டில் சிறப்பு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ரூ. 1 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன.
இதன் மொத்த மதிப்பு ரூ. 1,62,36,926 என்று சிறப்பு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முஸ்சாபர்பூர், சமஸ்திபூர், பாட்னா ஆகிய இடங்களில் உள்ள மணிரஞ்சனுக்கு சொந்தமான மூன்று வீடுகள் மற்றும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றில் நடத்திய சோதனையில் பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சார் பதிவாளர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.