பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதான ‘நகடக் பெல் ஜி கோர்லோ’ விருது வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. கொரோனா காலத்தில், தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டு 2 நாட்களாக பயணமாக அண்டை நாடான பூட்டான் சென்றார். அப்போது, இருநாடுகளின் நட்பு, எதிர்காலம் குறித்து, பூட்டான் மன்னர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா பூடான் இடையே ராணுவ , பாதுகாப்புத்துறை, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறை ஒப்பந்தங்களும், பூடான் கல்வித்துறை சார்பில், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும், சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் நான்கு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல நாடுகள் போதிய தடுப்பூசி கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்த இக்கட்டான சூழலில், இந்தியா சார்பில், பூடானுக்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கி உதவி செய்தது. இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருjன ‘கடாக் பெல் வி கோர்லோ’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் பிரதமர் லோதே ஷெரிங் வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில்,, ‘மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு பூடானின் உயரிய சிவிலியன் விருதான கடாக் பெல் வி கோல்லோ விருது வழங்கப்படுகிறது. பூடானுடன் பல ஆண்டுகளாக இந்தியா நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. கொரோனா காலத்திலும், பல உதவிகளை இந்தியா செய்ததை நினைவுகூர்கிறோம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து உதவி செய்து வரும் இந்தியாவுக்கும், அதன் பிரதமர் மோடிக்கும் பூடான் அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த விருதை பெறுவதற்கு பிரதமர் மோடி பொருத்தமானவர். பூடான் மக்களின் அன்பை பெற்றவராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவருக்கு விருது வழங்கும் நாளை நான் எதிர்பார்த்துள்ளேன்’ .
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.