டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், வாகன சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இறுதியாக டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு செய்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வாகன பதிவு, வாகனச் சான்று உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, செல்லுபடி யாகும் வகையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதற்கான அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அக்டோபர் வரை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 15ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது , வாகனங்களின் தகுதிச் சான்றிதழ், புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என அவகாசத்தை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மோட்டார் வாகன விதிகள் 1989இன் கீழ் அனைத்து ஆவணங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வாகனங்களின் தகுதிச் சான்றிதழ், வாகன புதுப்பிப்பு, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவுக்கு இதுவேக கடைசி நீட்டிப்பு, இதற்குமேல் நீட்டிப்பு கிடையாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது.