அசாம் மாநிலம் புல்பார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 நாய்களை போலீசார் மீட்டனர்.
நாகாலாந்து மாநிலத்திற்கு கடத்தப்பட இருந்த இந்த நாய்கள் அனைத்தும் நாட்டு நாய்கள் என்பதும் அதனை கோணியில் சுற்றி கயிற்றால் கட்டி வைத்திருந்ததுடன் அவற்றுக்கு மயக்கமருந்தும் செலுத்தப்பட்டிருந்ததாக போலீசார் கூறினர்.
இது தொடர்பாக நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் சில நாய்கள் வீடுகளில் இருந்து திருடப்பட்டதாக கூறிய அவர்கள் ரோட்டில் சுற்றித் திரியும் நாய்களையும் பிடித்து வைத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
நாகாலாந்து மாநிலத்தில் நாய்கறிக்கு மவுசு அதிகம் அதிலும் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரயிலான காலகட்டத்தில் நாய்கறி அமோகமாக விற்பனையாகும்.
கடந்த ஜீலை மாதம் முதல் நாகாலாந்தில் நாய்கறி விற்பனைக்கு அம்மாநில அரசு தடைவிதித்திருக்கிறது, இதனை எதிர்த்து கறி விற்பனையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.