கொழும்பு: இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனாவை அனுமதிக்க மாட்டோம் என இலங்கை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜகப்சே தலைமையிலான சிங்கள அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இலங்கை கடற்றொழில் அமைச்சராக உள்ளார்.

இவர் கொழும்பு கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தபோது, செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது செய்தியாளர் ஒருவர்,   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், இலங்கை வடக்குப்பதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அது  இந்தியாவுக்கு சவாலாக அமையும், இதுதொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்தஅமைச்சர் டக்ளஸ்,  இந்த நாடு இலங்கை மக்களுகு சொந்தம். இங்கு இலங்கை ஆட்சி செய்யும், அல்லது அது நெறிபடுத்தியவர்கள் ஆள்வார்கள். வேறு எந்த நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து ஆட்சி செய்ய முடியாது. அதே நேரத்தில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சீனா செயல்படவும் நாங்கள் விடமாட்டோம் என்று உறுதி தெரிவித்தார்.

ஏற்கனவே இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா, கடனை வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதன்பேரிலேயே கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா ஆக்கிரமித்து உள்ளது.  இந்து சமுத்திரத்தின் கடற்படை வழித்தடமாக சீனா அதை மாற்றி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு அபாயகரமானதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை அமைச்சர் சீனா ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.