மும்பை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 73ஆக உயர்ந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான தொற்று பாதிப்பு அதிகரித்து வருவ தால் மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கி உள்ள பிறழ்வு வைரசான ஒமிக்ரான், அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களுக்குள் இந்தியா உள்பட  77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒருவருக்கு ஒமிக்ரான தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வரை 28 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்பட பல மாநிங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில்  பொது இடங்களில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2022ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஒமிக்ரான் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும்,  ஒமிக்ரான்  அலை வீசும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிரா மாநில அரசு, மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .