சென்னை: தமிழ்நாட்டில், தற்போது சுழற்றி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 3-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் என தமிழகஅரச அறிவித்து உள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று குறையத்தொடங்கியதால், செப்டம்பர் மாதம் முதல் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அதையடுத்து சுழற்றி முறையில் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி வகுப்புகள் சுழற்சி முறை இன்றி, நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்தது. அதையடுத்து, அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அரசாணையில்; தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும்,3.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.