புதுச்சேரி

புதுச்சேரி அரசு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.  இந்த கட்டுப்பாடு ஜனவரி 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.  ஆயினும் இன்று புதுச்சேரி மாநில அரசு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளிலும் ஆங்கில புத்தாண்டுக்காக டிசம்பர் 30 மற்றும் 31 தேதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை மட்டுமே இந்த தளர்வுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரிடம் அனுமதி பெற்று இந்த கொண்டாட்டங்களை ஒட்டி மதுக்கடைகளை கூடுதல் நேரத்துக்கு திறக்கலாம் எனவும் கொரோனா விதிகளைப் பின்பற்றி பொது மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தலாம் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.