சென்னை

மிழகத்தில் இன்று 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,37,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,02,775 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,58,02,775 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 27,37,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,644 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 692 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,93,143 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 7,548 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,59,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,636 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 111 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,49,853 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 106 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,51,920 பேர் பாதிக்கப்பட்டு 2,492 பேர் உயிர் இழந்து 2,48,280 பேர் குணம் அடைந்து தற்போது 1,148 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,608 பேர் பாதிக்கப்பட்டு 2,541 பேர் உயிர் இழந்து 1,71,489 பேர் குணம் அடைந்து தற்போது 578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.