உக்ரைன் நாட்டுடன் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது ரஷ்யா.

தனது நாட்டு ராணுவ படையினரை உக்ரைன் எல்லையில் குவித்துவருகிறது ரஷ்யா.

இதனால் இருநாடுகளுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஓரிரு மாதங்களில் உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலை நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவு பிரிவினர் தகவலளித்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா அதிபர் புட்டினுடன் காணொளி காட்சி மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது புடினை கண்டித்த அவர் உக்ரைனுடனான மோதல் போக்கைக் கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

மீறி உக்ரைன் மீது சண்டையில் இறங்கினால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் உக்ரைனுக்கு ராணுவ உதவியும் வழங்கத் தயங்காது என்பதை தெளிவுபடுத்தினார்.