மும்பை
மும்பையில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி இந்தியாவில் மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது.
ஒமிக்ரான் பரவல் மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த 295 பேரில் 109 பேர் எங்கு இருக்கிறார்கள் எனக் கண்டறியமுடியவில்லை என்று கல்யாண் டோம்பிவலி முனிசிபல் கார்ப்பரேஷன் தலைவர் விஜய் சூர்யவன்சி தெரிவித்துள்ளார். இவர்களில் பலரின் தொலைப்பேசி எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், வீடுகள் பூட்டியிருப்பதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். இ;அலொ; இதுவரை இந்த வைரஸால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர மும்பையில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டுமே 10 பேருக்குத் தொற்று உள்ளது. தற்போது ஒமிக்ரான் தொற்று உறுதியான இருவருமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.