இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு, ‘ஆண்டின் சிறந்த பெண்’ என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ். இவர் சர்வதேச அளவில் ஏராளமான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வாங்கிக்குவித்துள்ளார். இவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, கடந்த 2016ஆம் ஆண்டு இளம் பெண்களுக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கி, பயிற்சி அளித்து வருகிறார். இவரது மையத்தில் பயிற்சி பெற்ற பல பெண்கள், சர்வதேச அளவுகளில் பல்வேறு விருதுகளைக் குவித்தனர்.
மேலும், இந்திய தடகள கூட்டமைப்பில் பாலின சமத்துவத்திற்குத் தொடர் குரல் கொடுத்துவந்த அஞ்சு, பின் நாள்களில் அந்த அமைப்பின் மூத்தத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு பள்ளி மாணவர்களின் விளையாட்டு எதிர்காலங்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறார்.
இந்திய விளையாட்டுத் துறையின் வளர்
ச்சியில் அவரின் முயற்சியைப் பாராட்டும்விதமாக உலக தடகள அமைப்பு ‘ஆண்டின் சிறந்த பெண்’ என்ற விருதை அஞ்சுவிற்கு வழங்கி கௌரவித்தது.
உலக தடகள விருதுகள் 2021 நிகழ்ச்சி நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது அதில் அஞ்சு ஜார்ஜுக்கு ‘ஆண்டின் சிறந்த பெண்’ விருது வழங்கப்பட்டது.
மேலும், ஒலிம்பிக் சாம்பியன்களான ஜமைக்காவின் எலைன் தாம்சன்-ஹேரா, நார்வே நாட்டு வீராங்கனை கார்ஸ்டன் வார்ஹோம் ஆகியோருக்கு ‘ஆண்டின் உலக தடகள வீரர்கள்’ விருதை உலக தடகள நிறுவனம் அளித்துள்ளது. உ