சென்னை: தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கி உள்ள ‘ஒமிக்ரான்’ வைரஸ் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிக பிறழ்வு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது டெல்டாபிளஸ் வைரஸை விட தீவிர மானது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கி உள்ள நிலையில், பெங்களூரில் 2 பேருக்கு கண்டறியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்தியஅரசு தீவிர ஆலோசனை நடத்தியதுடன், மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, ஒமிக்ரான் வைரஸ் மற்றும் கண்காணிப்பு தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.