சென்னை; பென்சன்தாரர்களே ‘லைப் சான்றிதழ்’ சமர்ப்பிக்க நவம்பர் 30ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பென்சன் வாங்குபவர்கள் ஆண்டுதோறும் லைப் சான்றிதழ் எனப்படும் ஜீவன் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி ஓய்வூதிய தாரர்கள் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும். ஆனால், இதில் பல சிக்கல்கள் எழுந்ததால், லைப் சான்றிதழ் சமர்ப்பித்தால் போனதுமானது என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டு்ம் நவம்பர் மாதத்தில் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் டிசம்பர் மாதம் அவர்கள் ஓய்வூதிய பலன் பெற முடியாது.
தற்போது லைப் சான்றிதழ் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதனப்டி, டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஜீவன் பிரமான் ஆப்பினை பதிவிறக்கம் செய்தால் போதுமானது.
அதில் ஆதார் எண், உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பதிவு செய்ததை உறுதி செய்ய மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு சப்மிட் கொடுத்தாலே போதுமானது. இதில் PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் இவைகளை பதிவிட வேண்டும்.
இத்துடன் ஆதார் எண்ணையும் சமர்ப்பித்து கை ரேகையை ஸ்கேன் செய்தால், ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். இந்த வகையில் ஓய்வூதியதாரர்கள் லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிக்கலாம்.
அஞ்சலகத்தில் தபால்காரர்களிடமும் வீடு தேடி வந்து டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் சேவையை பெறலாம். இதற்கு கட்டணமாக 70 ரூபாய் வசூலிக்கப்படும். இதனை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் தங்கள் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்கலாம்.